top of page
Group 39.png

ரூ.142 கோடி மதிப்புள்ள கொகைன் கடத்தல்: கட்டுநாயக்கவில் 41 வயது பெண் கைது.

Author Logo.png

M Nizam Farzathi

30/12/24

ரூ. 142 மில்லியன் மதிப்புள்ள கொகைனுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெண் கைது


இலங்கைக்குள் கொகைன் கடத்த முயன்றதற்காக 41 வயதான பெண் ஒருவர் இன்று அதிகாலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.


தென் ஆப்பிரிக்க பாஸ்போர்ட்டில் பயணித்த சந்தேக நபர், கானாவிலிருந்து கதார் ஏர்வேஸ் விமானத்தில் காலை 1:50 மணியளவில் வந்திறங்கினார்.


போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள் அவரிடமிருந்து சுமார் 4,068 கிராம் கொகைனை கண்டுபிடித்தனர்.கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு ரூ. 142 மில்லியன் என சுங்கத்துறை துணை பணிப்பாளர் நாயகமும் ஊடகப் பேச்சாளருமான சிவாலி அருக்கொட தெரிவித்தார்.

bottom of page