
அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறை (ICE) அறிக்கையின்படி, 2024 நவம்பர் 24 நிலவரப்படி, 3,065 இலங்கை நாட்டவர்கள் இறுதி நாடுகடத்தல் உத்தரவுடன் தடுப்புக்காவல் அல்லாத பட்டியலில் உள்ளனர்.
அனைத்து நாடுகடத்தல்களையும் உடனடியாக மேற்கொள்ள முடியாது என்று ICE தெரிவித்துள்ளது. அடைக்கலக் கோரிக்கைகள் மற்றும் வெளிநாட்டு அரசுகளின் ஒத்துழைப்பு இன்மை போன்ற சட்ட மற்றும் தளவாட சவால்கள் காரணமாக தாமதம் ஏற்படுகிறது.
குடியுரிமையை உறுதிப்படுத்தி, பயண ஆவணங்களை வழங்கி, நாடு திரும்பும் விமானங்களை ஏற்றுக்கொள்ள அனைத்து நாடுகளும் முன்வர வேண்டும் என அமெரிக்கா எதிர்பார்க்கிறது.
ஆனால் சில நாடுகள் இந்த செயல்முறையை தாமதப்படுத்துகின்றன.நாடு கடத்தப்பட்ட குடிமக்களை ஏற்க மறுக்கும் 15 நாடுகளை ICE ஒத்துழைப்பு இல்லாத நாடுகளாக அறிவித்துள்ளது.
இலங்கை இந்த பட்டியலில் இல்லை. மேலும், 11 நாடுகள் ஒத்துழைப்பு இல்லாத அபாயத்தில் உள்ளதாக கருதப்படுகின்றன.