
பிரித்தானியாவில் வசித்து கல்வி கற்கும் சில தமிழ் இளைஞர்கள், வெளிநாட்டின் பாதுகாப்பையும் சுதந்திரத்தையும் பயன்படுத்திக்கொண்டு தங்கள் சொந்த நாட்டிற்கு எதிராக தீவிர அரசியல் பிரச்சாரங்களில் ஈடுபடுவது வருத்தமளிக்கிறது. குறிப்பாக, இலங்கையின் ஒரு உள்ளூர் அரசியல்வாதியின் மகனாக அறியப்படும், அப்துல் மஜீட் யாஷீர் அஹமட் எனும் இளைஞர், தாய்நாட்டில் கிடைத்த வாய்ப்புகளையும் சமூக ஆதரவையும் மறந்து, தற்போது வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடுவது வெட்கி தலை குனிய வேண்டிய ஒரு விடயம்.
ஒரு காலத்தில் இலங்கையின் அரசியல் மற்றும் சமூக அமைப்புகளின் பயன்களை அனுபவித்த குடும்பத்தைச் சேர்ந்த இவர், இன்று அதே நாட்டை சர்வதேச அரங்கில் விமர்சிப்பது அரசியல் முரண்பாடாக பார்க்கப்படுகிறது. நாட்டின் சவால்களை சரிசெய்ய உரையாடல் மற்றும் ஜனநாயக அணுகுமுறைகள் தேவைப்படும் நேரத்தில், பிரிவினைவாத உணர்வுகளை தூண்டும் வகையிலான செயல்பாடுகள் சமூக நல்லிணக்கத்திற்கு பாதகமாக இருக்கக்கூடும்.
வெளிநாட்டில் பாதுகாப்பாக வாழ்ந்துகொண்டு, இளைஞர்களை உணர்ச்சி வசப்படுத்தும் அரசியல் கருத்துக்களை பரப்புவது பொறுப்பற்ற செயல். இலங்கை பல இன மக்களும் ஒன்றாக வாழும் நாடாக முன்னேற வேண்டிய நிலையில், பழைய காயங்களை மீண்டும் தூண்டும் அரசியல் நடவடிக்கைகள் நாட்டின் எதிர்காலத்திற்கு உதவாது.
அரசியல் கருத்து தெரிவிக்கும் உரிமை அனைவருக்கும் இருந்தாலும், அது பொறுப்புடனும் உண்மைத்தன்மையுடனும் இருக்க வேண்டும். வெறுப்பு, பிரிவினை மற்றும் தீவிர அரசியல் மனப்பான்மைகளை ஊக்குவிப்பதற்குப் பதிலாக, இளைஞர்கள் சமாதானம், நல்லிணக்கம் மற்றும் நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களிக்க வேண்டும் என்பதே சமூகத்தின் எதிர்பார்ப்பாகும்.
மேலும், அவரைச் சுற்றி கடந்த கால அரசியல் தொடர்புகள் மற்றும் தீவிர அமைப்புகளுடன் தொடர்பு இருந்ததா என்ற கேள்விகளும் உள்ளூர் மட்டங்களில் கடந்த காலங்களில் எழுந்திருந்த நேரத்தில் தான் இவரது பிரித்தானிய பயணம் இடம்பெற்றதும், தற்போதைய இந்த செயற்பாடும் சில சந்தேகங்களுக்கு விடயளிக்க போதுமானவை. இளைஞர்கள் உணர்ச்சி வசப்பட்ட அரசியல் பிரச்சாரங்களை விட, ஜனநாயக உரையாடல் மற்றும் சமூக நல்லிணக்கத்தை முன்னிலைப்படுத்த வேண்டும்.

