top of page
Group 39.png

ஐரோப்பா எல்லையில் சடலமாக மீட்கப்பட்ட யாழ்ப்பாண இளைஞன்! கொலை என சந்தேகம்?

Author Logo.png

Mohamed Nizam Farzath

16/10/24

ஐரோப்பா எல்லைப் பகுதியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


யாழ்.கோப்பாய் பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞர் ஒரு வருடங்களுக்கு  முன்னர் அரபு நாடு ஒன்றில் இருந்து ஐரோப்பா நாடுக்கு செல்ல முயற்சி   செய்ததாக கூறப்படுகின்றது.


சிறு வயது முதல் தந்தையை இழந்த இளைஞர் உறவினர்கள் உதவியுடன் ஐரோப்பா நாட்டுக்கு செல்ல முயற்சித்துள்ளார்.


இந்த நிலையில்  (14-10-2024) 8 பேர் கொண்ட இளைஞர் குழு ஒன்று,  ஐரோப்பா ரஷ்யா எல்லையை கடக்க முயற்சி செய்த நிலையில் குறித்த உயிரிழப்பு  இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் 25 வயதான இளைஞரே உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ளது.


இந்நிலையில் இளைஞனின் சடலத்தை நாட்டுக்கு கொண்டு வர உறவினர்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

bottom of page