top of page
காசா நகரில் தங்குமிடமாக மாற்றப்பட்டிருந்த பாடசாலை மீது இஸ்ரேலிய விமானம் நடத்திய தாக்குதலில் 70க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக அல்-அஹ்லி மருத்துவமனை இயக்குநர் பிபிசியிடம் கூறினார்.
அந்த மருத்துவமனை இயக்குநர் ஃபட்ல் நயீம், பலர் அடையாளம் காணப்பட்டு, பலரின் உடல்கள் தீவிரமாக சேதமடைந்துள்ளதால் அடையாளம் காண முடியாத நிலையிலிருப்பதாக தெரிவித்தார்.
இஸ்ரேலிய இராணுவ செய்தித்தொடர்பாளர், அல்-தபாபீன் பாடசாலை "ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் இராணுவ நடவடிக்கைகளுக்கான ஒரு மையமாக இருந்தது" என கூறினார், ஆனால் ஹமாஸ் இதனை மறுத்தது.
மேற்கத்திய நாடுகளும் பிராந்திய நாடுகளும் இஸ்ரேல் தாக்குதலை கடுமையாக கண்டித்துள்ளன. இந்த தாக்குதல், காசா போரை முடிவுக்குக் கொண்டு செல்ல, அல்லது சமரசம் செய்ய, இஸ்ரேலுக்கு விருப்பமில்லை என்பதற்கான அடையாளமாகக் கருதப்பட்டுள்ளது.
bottom of page