top of page
2034 ஆம் ஆண்டு ஆண்கள் கால்பந்து உலகக் கோப்பை சவுதி அரேபியாவில் நடைபெறும், மேலும் 2030 ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கு ஸ்பெயின், போர்ச்சுகல் மற்றும் மொராக்கோ இணைந்து ஏற்பாடு செய்யும் என்று உலக கால்பந்து நிர்வாக அமைப்பான பிஃபா உறுதி செய்துள்ளது.
2030 ஆம் ஆண்டுக்கான தொடரின் மூன்று போட்டிகள் அர்ஜென்டினா, பராகுவே மற்றும் உருகுவேயில் நடைபெறும். இது உலகக் கோப்பையின் 100 ஆண்டுகளை கொண்டாடும் வகையில் அமையும்.இரண்டு உலகக் கோப்பைகளுக்கான ஏற்பாட்டாளர்கள் புதன்கிழமை நடைபெற்ற அசாதாரண பிஃபா காங்கிரஸ் கூட்டத்தில் வாக்கெடுப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டனர்.
bottom of page