யாழ்ப்பாணத்தில் பரவி வரும் அடையாளம் தெரியாத காய்ச்சலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஐந்தாக (05) உயர்ந்துள்ளதாக யாழ்ப்பாணம் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே, டாக்டர் சத்தியமூர்த்தி, இந்த மரணங்கள் காய்ச்சல் மற்றும் சுவாசக் கோளாறுகளால் ஏற்பட்டதாக வெளிப்படுத்தினார்.
மேலும், உயிரிழந்தவர்கள் 20 முதல் 65 வயதுக்குள் உள்ளவர்கள் எனவும் அவர் கூறினார்.இந்த நோய் பொதுவாக எலிப் புண் காய்ச்சல் என அழைக்கப்படும் லெப்டோஸ்பைரோசிஸ் என சந்தேகிக்கப்படுவதால், இரத்த மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி நோய்த் தன்மையை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், சுகாதார மேம்பாட்டு பணியகம் இந்த அடையாளம் தெரியாத நோயை ஆராயும் விசாரணையை தொடங்கியுள்ளது.சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவின் டாக்டர் குமுது வீரகோன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே, நோயின் சரியான தன்மையை கண்டறிய விரிவான விசாரணைகள் நடைபெற்று வருவதாக கூறினார்.மேலும், நோய் பரவலை கட்டுப்படுத்த அதிகாரிகள் தொடர்ந்து நிலைமையை கவனித்து வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.