top of page
Group 39.png

‘உயிர்த்த ஞாயிறு தாக்குதல் உங்களிற்கும் தெரிந்திருந்தது ஜனாதிபதி அவர்களே”; பாதிக்கப்பட்ட ஒருவர் குற்றச்சாட்டு

Author Logo.png

Alavudeen Mohamed Sajith

29/10/24

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தாக்குதல்கள் இடம்பெறப்போகின்றன என்பது  அனைத்து அரசியல்வாதிகளிற்கும் தெரிந்திருந்தது என பாதிக்கப்பட்ட ஒருவர்  ஜனாதிபதியின் முன்னிலையில் தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதி நேற்று நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி கிறிஸ்தவ  தேவாலயத்திற்கு விஜயம் மேற்கொண்டு பாதிக்கப்பட்டவர்களுடன் நேரடியாக  உரையாடியவேளை பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் கருத்துக்களை முன்வைப்பதற்கு  வாய்ப்பு வழங்கப்பட்டது.


அவ்வேளை பாதிக்கப்பட்ட ஒருவர் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தாக்குதல்  இடம்பெறப்போகின்றது என்பது அனைத்து அரசியல்வாதிகளிற்கும் தெரிந்திருந்தது  என குறிப்பிட்டுள்ளார்.


இதற்கு பதிலளித்துள்ள ஜனாதிபதி மிக முக்கியமான சில அரசியல்வாதிகளின்  விசேட பாதுகாப்பு பிரிவினருக்கு மாத்திரம் தாக்குதல் இடம்பெறலாம் என தகவல்  வழங்கப்பட்டிருந்தது என அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்துள்ளார்.


எனக்கும் எனது சகாக்களுக்கும் அவ்வேளை விசேட பாதுகாப்பு  வழங்கப்பட்டிருக்கவில்லை என தெரிவித்துள்ள ஜனாதிபதி உயிர்த்த ஞாயிறு  தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களிற்கு எவ்வாறு நீதியை வழங்க முடியும் என்பதை  கோடிட்டுக்காட்டியுள்ளார்.


தாக்குதலுடன் தொடர்புடையவர்களை விசாரணைகள் மூலம் அடையாளம் கண்டு  அவர்களை தண்டித்தல்,எதிர்காலத்தில் மீண்டும் அவ்வாறான தாக்குதல்கள்  இடம்பெறுவதை தவிர்த்தல், போன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் என ஜனாதிபதி  தெரிவித்துள்ளார்

bottom of page