முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னான்டோ, முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரை மீள நீதிமன்றம் அழைக்க நடவடிக்கை எடுக்குமாறு உயர்நீதிமன்ற நீதிபதி குழாம் மேல் நீதிமன்ற நீதிபதி குழாமிற்கு இன்று அறிவித்தது.
அவர்களை விடுப்பதற்கான உத்தரவிற்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை விசாரணைக்கு எடுத்த போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து முன்கூட்டியே தகவல் கிடைத்த போதிலும் அதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கத் தவறியதன் ஊடாக தெரிந்தே கடமையை புறக்கணித்தமை, கொலை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.
இந்த குற்றச்சாட்டுகளிலிருந்து அவர்களை விடுவிக்கும் வகையில் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி குழாம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக சட்டமா அதிபர் மேன்முறையீடு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
இதனை ஆராய்ந்த உயர் நீதிமன்றம் குறித்த வழக்குடன் தொடர்புடைய பிரதிவாதி தரப்பை அழைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டது.