top of page
Group 39.png

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பின்புலத்தில் செயற்பட்டவர்கள் யார்? விசாரனைகளை தடுக்கின்றவர்கள் யார்? எதற்காக நடந்தேறியது? என்ற பல கேள்விகளுடன்.

Author Logo.png

Mohamed Nizam Farzath

28/4/25

2019 ஏப்ரல் 21ஆம் தேதி ஈஸ்டர் ஞாயிறன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பான நீதிக்கான நடவடிக்கைகள் தற்போது அரசு மேற்கொண்டு வருகின்ற போதிலும், சில விடயங்களின் உண்மைத் தன்மை வெளிவராமலே இருக்கின்றது.


முதலாவது… 2018 நவம்பர் 30 ஆம் திகதியன்று வவுணதீவில் இரண்டு காவற்துறை  அதிகாரிகள் கொல்லப்பட்டது மற்றும் அது தொடர்பான விடயங்கள்.”


“இரண்டாவது… சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பது தெரியவந்த IP முகவரியை யார் பயன்படுத்தினார்கள்.”


“மூன்றாவது… வவுணதீவு சம்பவத்தை தவறாக சித்தரித்த சம்பவம்.”


“நான்காவது… தெஹிவளையில் தாக்குதல் நடத்தியவரின் கைப்பேசிக்கு வந்த அழைப்பு.”


“ஐந்தாவது… தெஹிவளையில் தாக்குதல் நடத்தியவரின் வீட்டிற்குச் சென்ற அதிகாரிகள் யார்?”


ஆறாவது.....கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் தற்கொலை குண்டுத்தாக்குதல் மேற்கொண்ட தற்கொலைதாரியை அழைத்து வருமாறு தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பில் இருந்த சுரேஷ் சலே, அசாத் மௌலானாவிடம் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.


ஏழாவது,2018 ஆம் ஆண்டு புத்தளத்தில் சுரேஷ் சலேவிற்கும் சஹ்ரானுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


எட்டாவது,  உயிரத்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சஹ்ரான் மனைவியிடம் மேற்கொண்ட விசாரணையின் போது அபுஹிந்த் என்ற நபர்.  

இந்த விடயங்களின் உண்மைத் தன்மை வெளிவராமலே இருக்கின்றது.



அதே போன்று 

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள்  ஆழமான அரசின் நிழல் என்றே நான் நம்புகிறேன்.


ஆழ் அரசின் நிழலுருவும் தீர்க்கப்படாத மர்மங்களும்.   கண்களுக்கு புலப்படாத ஆழ் அரசு என்பது, ஒரு அரசாங்கத்தின் கொள்கைகளையும் அதன் ஆட்சி முறைமையையும் இரகசியமாக கையாளுகின்ற அல்லது கட்டுப்படுத்துகின்ற, பொதுவாக அரசு நிறுவனங்கள் அல்லது இராணுவத்திற்குள் இருக்கும் சக்திவாய்ந்த உறுப்பினர்களின் ஒருவித தலைமறைவு வலையமைப்பாகும். மேலும் அத்தகைய சக்தியானது தீவிரவாத சித்தாந்தங்கள் மீதே அதிகம் தங்கியிருக்கிறார்கள் என்றும் நம்பப்படுகிறது. 


இது ஒரு அரசின் அரசியல் தலைமையிலிருந்து ஒப்பீட்டளவில் சுதந்திரமாகவோ அல்லது அரசுடன் சேர்ந்தோ, தங்கள் சொந்த நிகழ்ச்சி நிரலுடன் மற்றும் தங்கள் சொந்த இலக்குகளைத் நோக்கி, செயல்படக்கூடிய இரகசிய மற்றும் இராணுவ சக்திகளின் வலையமைப்புகளால் ஆன ஒரு கட்டமைப்புமாகும்.


இலங்கையில் நிகழ்ந்த 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள், இந்த நாட்டில் கண்களுக்கு புலப்படாது தலைமறைவாக இருக்கும் அத்தகைய சக்திகளினால், அரசியல் மற்றும் அரசின் நிகழ்ச்சி நிரல் என்பவற்றுக்காக அரசின் ஒப்புதலுடனும் நடத்தப்பட்டிருக்கலாம் என்று நான் நம்புகிறேன்.


மூன்று தசாப்தகால உள்நாட்டுப் போரின்போது கூட கண்டிராத வகையிலான அதிர்ச்சியிலும் பயங்கரத்திலும் முழு நாட்டையும் ஆழ்த்திய 2019 ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களுக்குப் பிறகு ஐந்து ஈஸ்டர் ஞாயிறுகள் கடந்துவிட்டன. மூன்று தேவாலயங்களிலும் மூன்று ஆடம்பர  ஹோட்டல்களிலும் பத்து தற்கொலைக் குண்டுதாரிகளினால் அக்காலத்தில் ஒருங்கிசைவான முறையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் 272 பேர் கொல்லப்பட்டதுடன் 500 இற்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். இவர்களில் முழு குடும்பங்களும் பெற்றோருடன் பிள்ளைகளும் மற்றும் இலங்கையின் அன்பையும் நட்பிணக்கத்தையும் அனுபவிக்க வந்த  வெளிநாட்டவர்களும் அடங்குவர்.



இரு மாதங்களாக நாடு முடங்கிப்போய்க் கிடந்தது.  அப்போது பரவிய வதந்திகளினால் பீதியடைந்த மக்கள் வெளிப்பகுதிகளுக்கு வரத் தயங்கினர். உள்நாட்டில் முன்னைய முரண் நிலை வரலாற்றைக் கொண்டிராத ஒரு சிறுபான்மை மதக்குழு இன்னொரு சிறுபான்மை மதக்குழுவுக்கு எதிராக மேற்கொண்ட அந்த குண்டுத் தாக்குதல்களுக்கு எந்தவிதமான தர்க்க நியாயமும் கிடையாது. 

இந்தத் தாக்குதல்கள் ஒரு தசாப்தத்துக்கு முன்னர் உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்த பிறகு முன்னெடுக்கப்பட்ட நல்லிணக்கப் பணிகள் சகலதையும் கெடுத்துவிட்டன.


குண்டுத் தாக்குதல்களுக்குப் பிறகு நிலவிய குழப்பநிலை மற்றும் ஊகங்களுக்கு மத்தியில் முழு நாடும் அச்சத்தில் உறைந்திருந்தது. ஆனால், சில எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் அத்தகைய அச்சவுணர்வை வெளிக்காட்டவில்லை. தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு அவலம் நிறைந்ததாக காட்சி தந்த இடங்களுக்கு முதலில் வந்தவர்களில் ஒருவர் அப்போது எதிர்க்கட்சியில் இருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ. அப்போது ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் விருப்பத்தைக் கொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ எதிர்க்கட்சியில் இருந்து அந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்கு மிகவும் பொருத்தமான வேட்பாளர் என்று உடனடியாகவே தன்னை அறிவித்ததை காணக்கூடியதாக இருந்தது.


ஒரு தசாப்தத்துக்கு முன்னதாக விடுதலைப் புலிகளை போரில் தோற்கடித்ததைப் போன்று தேசிய பாதுகாப்பை மீண்டும் நிலைநாட்டுவதாக அவர் உறுதியளித்தார். பீதியில் வாழ்ந்துகொண்டிருந்த நாட்டு மக்கள் மத்தியில் அவரது உறுதிமொழி எடுபட்டது. 2019 நவம்பர் ஜனாதிபதித் தேர்தலில் அவரை ஒரு மிகப்பெரிய பெரும்பான்மை வாக்குகளால் தெரிவுசெய்தனர்.


ஆனால், அடுத்தடுத்து பதவிக்கு வந்த மூன்று ஜனாதிபதிகளின் கீழான அரசாங்கங்களினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் குண்டுத் தாக்குதல்களின் பின்னணியில் இருந்தவர்கள் யார் என்ற உண்மையை வெளிப்படுத்தவில்லை. இதுவரையில் அது விடயத்தில் உயர்நீதிமன்றம் மாத்திரமே சிறந்த பணியை செய்திருக்கிறது எனலாம். சட்டரீதியான நிவாரணத்தை வழங்குவதற்கு அரசாங்கத்தினால் உகந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படாத நிலையில் கத்தோலிக்க திருச்சபையும் வேறு குடிமக்களும் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மீறல் வழக்கொன்றை அடுத்தே அது நடந்தது.

விசாரணை அறிக்கைகளை பரிசீலனை செய்த உயர்நீதிமன்றம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் நான்கு சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரிகளும் தங்களுக்கு கிடைக்கப்பெற்ற புலனாய்வு  தகவல் தொடர்பில் நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதன் மூலம் பொறுப்பை அலட்சியம் செய்ததாக அவர்களை குற்றவாளிகளாகக் கண்டது. அவர்களுக்கு எதிராக கோடிக்கணக்கான ரூபா அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால், குண்டுத்தாக்குதல்களின் பின்னணியில் இருந்திருக்கக்கூடிய சூத்திரதாரிகளை உயர்நீதிமன்றம் அடையாளம் காணவில்லை.


ஆனாலும் இக்குண்டு தாக்குதல்  கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டுவரும் உள்நோக்கத்துடன் அவர்களுக்கு நெருக்கமாக இருந்த இராணுவ புலனாய்வுப் பிரிவே ஈஸ்டர் தாக்குதலை நடத்தியதாகவே நான் குற்றம் சாற்றுகிறேன் .


அதே போல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் இல்லாமல், வசீம் தாஜுதீன், 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை, பரத லக்ஷ்மன் பிரேமரத்னவின் கொலை மற்றும் ஊடகவியலாளர் லசந்த கொலை உட்பட நாட்டில் பல முக்கிய குற்றங்களுடன் ராஜ பக்ஸ குடும்பமே காரணம் என்பதை நான் குற்றம் சாட்டுகின்றேன்  


இந்த விடயங்களின் உண்மை, பொய்யைக் கண்டறிய ஒரு குழுவை நியமிக்க வேண்டும் என்று நான் கூறுகின்றேன்.


மேலும்...


சனல் 4 ஆவணப்படத்திற்காக தாக்குதல் குறித்து சாட்சியமளித்த சாட்சியான அசாத் மௌலானா, புலனாய்வு சேவைக்கும் உள்ளூர் அரசியல்வாதிகளுக்கும் இடையே தொடர்புகள் இருப்பதாகவும், இந்த அமைப்புகள் தாக்குதலில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டினார். 

அவர் கூறிய உள்ளூர் அரசியல்வாதி என்பது மஹிந்த ராஜபக்ஸ  மற்றும் கோட்டாப்பய ராஜபக்ஸ ஆட்சியில் கிழக்கு முதலமைச்சராகவும் இராஜாங்க அமைச்சராகவும் செயற்பட்டவரான

பிள்ளையான் என்று அழைக்கப்படும் சிவநேசந்துரை சந்திரகாந்தன் ஆவார் இவர் பல கொலை வழக்கில் சந்தேகிக்கப்பட்டு வருகின்றவருமாவார். முன்னதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராசசிங்கம் கொலை தொடர்பில் ஜந்து வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிள்ளையான் பின்னராக கோத்தபாய ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தார்.

சிவநேசந்துரை சந்திரகாந்தனை விசாரனை செய்தால் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான பல உண்மைகளும் அதே போல்   தாக்குதலுக்குக் காரணமானவர்களையும் “சனல் 4 ஆவணப்படத்தில் தகவல்களை வழங்கிய அசாத் மௌலானாவையும்  விசாரிப்பதன் மூலமும் நிறைய விஷயங்களை வெளிப்படுத்த முடியும் என்று நான் நம்புகிறேன்,”  


மற்றும் சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்கவிடம் ஊடகவியலாளர்கள் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான வழக்குகளின் முன்னேற்றம் குறித்து கேட்டபோது, வழக்குகளை காவல்துறையினர் கையாண்டு வருவதாகவும் “நாங்கள் இதில் ஈடுபடவில்லை. நீங்கள் காவல்துறையினரிடம் பேச வேண்டும்"  என்று அவர் ”ஊடகங்களிடம் தெரிவித்தார்.


காவல்துறை ஊடகப் பேச்சாளர்


இது தொடர்பாக பேசிய காவல்துறை ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி .புத்திக மனதுங்க, தாக்குதல்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட அனைவரும் விளக்கமறியல் சிறையில் அல்லது நிபந்தனை பிணையில் வெளியே உள்ளனர் என்று தெரிவித்தார்.

தற்போது எந்த சந்தேக நபரும் காவல்துறை காவலில் இல்லை என்றும் அவர் கூறினார்.


இதற்கிடையில், பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர், விசாரணைகள் முன்னேறி வருவதாகக் கூறினார். “விசாரணைகள் நன்றாக நடந்து வருகின்றன. அவை முன்னேற்றம் அடைந்து வருகின்றன,” என்று அவர் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம் ஆரம்பித்துள்ள புதிய விசாரணைகள் திருப்திகரமானவை என்றாலும், “மொத்த செயல்முறை மெதுவாகவே” நடைபெறுகின்றது.


“கடந்த ஆறு ஆண்டுகளில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. விசாரணைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டிருந்தன.


இந்த அரசு ஆட்சிக்கு வந்த பிறகே, மீண்டும் விசாரணைகள் ஆரம்பித்தன. ஆனால், மெதுவாக நடைபெறுவது நல்லது அல்ல 

எனவே, அரசு எந்தப் பகுதியில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும்,”

அத்துடன், தாக்குதல் தொடர்பான வழக்குகளில் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பங்களிப்பு திருப்திகரமாக இல்லை, எனவே தனிச்சிறப்பு வழக்கறிஞர் அலுவலகம் ஒன்று அமைக்கப்படவேண்டும் எனவும் நான் கூறுகின்றேன்.


பர்ஸாத் முஹம்மது நிஸாம்

bottom of page