
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு முன்னாள் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பியங்கர ஜெயரத்னவுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகளில் மூன்று வழக்குகள் தாக்கல் செய்துள்ளது.
அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, 2025 ஜனவரி 08 அன்று கொழும்பு உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டதாக அறிவித்துள்ளது.
3,000 வெசாக் வாழ்த்து அட்டைகள் அச்சிடுவதால் இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபைக்கு ரூ. 128,520 நஷ்டம் ஏற்பட்டது தொடர்பாக ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனம் ஒன்றுக்கு ரூ. 360,000 கொடுப்பனவு செய்ய சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை அதிகாரிகளை தவறாக வழிநடத்தி அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்தியது தொடர்பாக இரண்டாவது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சிலாபம் தேசிய சேமிப்பு வங்கி கணக்கிற்கு ரூ. 494,000 தொகையை மாற்றுவதற்கு சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை அதிகாரிகளை தவறாக வழிநடத்தி அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்தியது தொடர்பாக இறுதி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.