top of page
Group 39.png

ரூ. 17 மில்லியன் மதிப்புள்ள இரத்தினக்கற்களுடன் சீன நாட்டவர்கள் கைது.

Author Logo.png

AM Sajith

15/1/25

சீனாவிற்கு ரூ. 17 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள இரத்தினக்கற்களை கடத்த முயன்ற இரு நபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.


திங்கள் இரவு புறப்படும் முனையத்தில் சீன நாட்டைச் சேர்ந்த ஒரு ஆணும் அவரது மகளும் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.வணிக நடவடிக்கைகளுக்காக இலங்கையின் பல பகுதிகளுக்கு சென்று வந்த இந்த இருவரும், ரூ. 17,450,875 மதிப்புள்ள இரத்தினக்கற்களை தங்களது உள்ளாடைகளில் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.


45 மற்றும் 21 வயதுடைய சந்தேக நபர்களிடம் சந்திரகாந்தி, கோமேதகம், கார்னெட், வைடூரியம் மற்றும் மரகதம் உள்ளிட்ட பல்வேறு வகையான இரத்தினக்கற்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.


கைது தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன

bottom of page