top of page
Group 39.png

பிரதீப் எக்னலிகொட மற்றும் தாஜுதீன் ஆகியோரின் விசாரணைகள்: இறுதி கட்டத்தில்.

Author Logo.png

A Mohamed Sajith

22/10/24

லசந்த விக்ரமதுங்க, பிரதீப் எக்னலிகொட மற்றும் தாஜுதீன் ஆகியோரின் குற்ற  விசாரணைகள் ஏறக்குறைய முடிவடைந்துள்ள நிலையில், அவர்களைத் தவிர 7 முக்கிய  குற்றவியல் வழக்குகள் துரித விசாரணைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக  அரசாங்கம் தெரிவித்துள்ளது.


எவ்வாறாயினும், ஏனைய கொலைகள் தொடர்பான விசாரணைகள் எதிர்காலத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அரசாங்கம் கூறுகிறது.


தற்போது நடைபெற்று வரும் குற்ற விசாரணைகள் தொடர்பான அமைச்சரவை  தீர்மானத்தை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர்  எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் விஜித ஹேரத் மேற்கண்டவாறு  தெரிவித்தார்.


இது தொடர்பில் கருத்து தெரிவித்தபோது,

எந்தவொரு குற்றவியல் நடவடிக்கையையும் நாங்கள் விசாரிக்காது இருக்க  மாட்டோம். அதனால் தான் சமீபத்திய சம்பவங்களான தாஜுதீன் கொலை, லசந்த  விக்கிரமதுங்க கொலை, மற்றும் பிரகீத் எக்னெலிகொட கொலை என அனைத்தையும்  நாங்கள் நிச்சயமாக விசாரிப்போம்.


பிரகீத் எக்னெலிகொட கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் முடிக்கப்பட்டு வழக்கு நடந்து வருகிறது. மீண்டும் ஒரு விசாரணை தேவையில்லை.


மேலதிக விசாரணைகள் தேவைப்படுமாயின் அதனை தொடரவும் முடியும். 7  முக்கிய குற்றவியல் வழக்குகள் துரித விசாரணைக்காக பரிந்துரைக்கப்பட்டு  அவசரமாக முடிக்கப்பட வேண்டியுள்ளது. மற்றபடி 7 தான் என்று தவறாக எண்ண  வேண்டாம்.


கடந்த காலங்களில் நடந்த அனைத்துப் பொருளாதாரக் குற்றங்கள், கொலைகள்,  ஊடகவியலாளர்கள் கடத்தல் போன்ற அனைத்துச் செயல்களுக்கும் சட்டம்  அமுல்படுத்தப்படும்..என அவர் குறிப்பிட்டார்

bottom of page