top of page
Group 39.png

அறுகம்பை தாக்குதல் யாருடையது? முக்கிய சூத்திரதாரி ஈரானியர்

Author Logo.png

A Mohamed Sajith

15/11/24

பொத்­துவில், அறு­கம்பே பகுதி உள்­ளிட்ட இஸ்­ரே­லி­யர்கள் அதிகம்  நட­மாடும் பகு­தி­களில் அவர்­க­ளையும் அவர்கள் சார் ஸ்தலங்­க­ளையும் இலக்கு  வைத்து ஒருங்­க­மைக்­கப்­ப­டாத தாக்­கு­தல்கள் நடாத்த திட்­ட­மிட்­ட­தாக  கூறப்­படும் சம்­ப­வத்தின் பிர­தான சூத்­தி­ர­தாரி ஈரா­னியர் ஒருவர் என  தக­வல்கள் வெளிப்­பட்­டுள்­ளன.


51 வய­தான பர்ஹாத் ஷகேரி என்­ப­வரே இந்த சம்­ப­வத்தின்  பின்­ன­ணியில் இருப்­பவர் என, அவர் உள்­ளிட்ட மூவ­ருக்கு எதி­ராக  அமெ­ரிக்­காவின் சட்ட திணைக்­களம் தொடுத்­துள்ள வழக்கை மையப்­ப­டுத்தி  அத்­தி­ணைக்­களம் வெளி­யிட்­டுள்ள அறிக்கை ஊடாக இந்த விடயம்  வெளிப்­பட்­டுள்­ளது.


அமெ­ரிக்­காவின் ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்பை கொலை செய்ய சதித்  திட்டம் தீட்­டி­யமை உள்­ளிட்ட குற்­றச்­சாட்டின் கீழ், எப்.பி.ஐ. இனு­டைய  நிவ்யோர்க் பிராந்­திய கள அலு­வ­லகம் ஊடாக முன்­னெ­டுக்­கப்­படும்  விசா­ர­ணை­களில், இரு சந்­தேக நபர்கள் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.


அவர்­களை விசா­ரித்­துள்ள எப்.பி.ஐ. அதி­கா­ரிகள்,  அவ்­வி­ரு­வ­ருக்கு மேல­தி­க­மாக இது­வரை கைது செய்­யப்­ப­டாத ஷகேரி எனும்  ஈரா­னி­ய­ரையும் சேர்த்து நிவ்யோர்க் தெற்கு மாவட்ட நீதி­மன்றில் அமெ­ரிக்க  சட்ட மா அதிபர் மெர்ரிக் பி. கார்லன்ட் (Merrick B. Garland.) ஊடாக  வழக்குத் தொடுத்­துள்ளார். இது தொடர்­பி­லான அறி­வித்­தலை அமெ­ரிக்­காவின்  சட்டத் திணைக்­களம் கடந்த 8 ஆம் திகதி வெளி­யிட்ட நிலை­யி­லேயே, அறு­கம்பே  விட­யத்தில், அம­ரிக்க ஜனா­தி­ப­தியை கொலை செய்ய சதி செய்த பிர­தான சந்­தேக  நப­ரான ஷகேரி தொடர்­பு­பட்­டுள்­ளமை வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.


அமெ­ரிக்க ஜனா­தி­பதி உள்­ளிட்ட அமெ­ரிக்க பிர­ஜைகள் பலரை கொலை  செய்ய ஷகேரி ஊடாக சதி செய்­யப்­பட்­டுள்­ள­தாக எப்.பி.ஐ. பணிப்­பாளர்  கிறிஸ்­தோபர் வ்ரே தெரி­வித்­த­துடன், அமெ­ரிக்­காவின் தேசிய  பாது­காப்­புக்கு அச்­சு­றுத்­த­லான, நேரடி தொடர்­பு­பட்ட ஈரா­னியர்  உள்­ளிட்­டோ­ருக்கு எதி­ராக வழக்குத் தொடுத்­த­தாக அமெ­ரிக்க சட்ட மா  அதிபர் மெர்ரிக் பி. கார்லன்ட் தெரி­வித்­துள்ளார்.


அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் கொலை சதி தொடர்பில்  நியூ­யார்க்கின் புரூக்ளின் பகு­தியில் வைத்து கார்­லிஸ்லே ரிவேரா என்ற 49  வயது நபரும் நியூ­யார்க்கில் உள்ள ஸ்டேட்டன் தீவில் வைத்து 36 வய­தான ஜொனன்  லோதோல்ட எனும் நபரும் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். எப்.பி.ஐ. இன்  நிவ்யோர்க் கள அலு­வ­லக அதி­கா­ரிகள் முன்­னெ­டுக்கும் இந்த  விசா­ர­ணை­க­ளுக்கு சுங்கம் மற்றும் எல்லை பாது­காப்பு விசா­ரணை  அலு­வ­ல­கமும், போதைப் பொருள் தடுப்பு பிராந்­திய அலு­வ­ல­கமும்  ஒத்­து­ழைப்பு வழங்­கி­யுள்­ளது.


இந்த நிலை­யி­லேயே கைதான சந்­தேக நபர்­க­ளிடம்  முன்­னெ­டுக்­கப்­பட்ட விசா­ர­ணை­களில் 51 வய­தான ஷகேரி தொடர்பில் தகவல்  வெளிப்­பட்­ட­தாக அமெ­ரிக்­காவின் சட்ட அமு­லாக்கல் பிரிவு  தெரி­வித்­துள்­ளது.

அது தொடர்­பி­லான மேல­திக விசா­ர­ணை­க­ளி­லேயே மேற்­படி பர்ஹாத்  ஷகேரி இலங்­கையின் சுற்­றுலா தலங்­களில் இஸ்­ரே­லி­யர்­களை இலக்கு வைத்து  தாக்­குதல் நடாத்த முன்­னெ­டுக்­கப்­பட்­ட­தாக கூறப்­ப‌ட்ட சதி­யு­டனும்  தொடர்­பு­பட்­டுள்­ளமை வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக அமெ­ரிக்க  நீதித்­துறை திணைக்­கலம் தெரி­விக்­கின்­றது.


இதே நேரம் அமெ­ரிக்க ஜனா­தி­பதி தேர்­தலில் டிரம்ப்  தோல்­வி­ய­டைவார் என்று சதித் திட்டம் தீட்­டியோர் நம்­பி­யுள்­ள­தா­கவும்,  தேர்­த­லுக்குப் பிறகு அவரை சுட்டுக் கொல்ல திட்­ட­மிட்­டுள்­ள­தா­கவும்  அமெ­ரிக்க நீதித்­துறை செய்­திக்­கு­றிப்பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த நட­வ­டிக்­கைகள் ஈரா­னிய புரட்­சி­கர காவலர் படையின்  பிர­தி­நி­தியால் வழி­ந­டத்­தப்­பட்­ட­தாக அம­ரிக்க நீதித் துறை  கூறு­கின்­றது.


அதே நேரம், நியூ­யோர்க்கில் வசிக்கும் இரண்டு யூத அமெ­ரிக்­கர்­களை  குறி­வைத்து தாக்­குதல் நடாத்­தவும், பிர­தான சூத்­தி­ர­தா­ரி­யாக  கரு­தப்­படும் ஷகே­ரிக்கு அறி­வு­றுத்­தல்கள் கிடைத்­துள்­ள­தா­கவும்,  ஈரா­னிய புரட்­சி­கர காவல்­படை அவர்கள் ஒவ்­வொ­ரு­வருர் தொடர்­பிலும் தலா  500,000 அமெ­ரிக்க டொலர்கள் வழங்­கு­வ­தாக உறு­தி­ய­ளித்­துள்­ள­தா­கவும்  அமெ­ரிக்க நீதித்­துறை வெளி­யிட்­டுள்ள செய்தி அறி­விப்பில்  கூறப்­பட்­டுள்­ளது.


பொத்­துவில், அறு­கம்பே பகுதி உள்­ளிட்ட இஸ்­ரே­லி­யர்கள் அதிகம்  நட­மாடும் பகு­தி­களில் அவர்­க­ளையும் அவர்கள் சார் ஸ்தலங்­க­ளையும் இலக்கு  வைத்து ஒருங்­க­மைக்­கப்­ப­டாத தாக்­கு­தல்கள் நடாத்த திட்­ட­மிட்­ட­தாக  கூறப்­படும் சம்­பவம் தொடர்பில் பலர் கைது செய்­யப்­பட்டு தடுப்புக்  காவலில் வைத்து விசா­ரித்து வரு­வ­தாக பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும்  விசா­ரணைப் பிரி­வினர் (சி.ரி.ஐ.டி.) தெரி­விக்­கின்­றனர்.


அமெ­ரிக்­காவின் எப்.பி.ஐ.அதி­கா­ரி­களின் விசா­ரணை பிர­காரம்,  பர்ஹாத் ஷகேரி எனும் ஈரா­னியர், ஈரானின் புரட்­சி­கர காவல் படையின்  பிர­தி­நிதி ஒரு­வரின் அறி­வு­றுத்­த­லுக்கு அமைய செயற்­பட்­டுள்­ள­தாக  கூறப்­ப­டு­கின்­றது.

எப்.பி.ஐ. அதி­கா­ரிகள் ஷகே­ரியை இது­வரை கைது செய்­யாத போதும், அவரை தொலை­பே­சியில் தொடர்­பு­கொண்­ட­தாக கூறப்­ப­டு­கின்­றது.


அதன்­படி எப்.பி. ஐ. அதி­கா­ரிகள் தொலை­பே­சியில் ஷகே­ரி­யிடம்  முன்­னெ­டுத்த உரை­யா­ட­லுக்கு அமைய, ஈரானின் புரட்­சி­கர காவலர் படையின்  அதி­காரி ஒருவர், இலங்­கையில் உள்ள இஸ்­ரே­லிய சுற்­றுலாப் பய­ணி­களைக்  குறி­வைத்து, அக்­டோபர் 2024 இல் ஒரு பாரிய துப்­பாக்கிச் சூட்டு  சம்­ப­வத்தை திட்­ட­மி­டு­மாறு ஷகே­ரி­யிடம் கேட்டுக் கொண்­டுள்­ள­தாக  எப்.பி.ஐ.இன் விசா­ரணை அறிக்கை கூறு­கின்­றது.


அவ்­வி­சா­ர­ணை­களின் பிர­காரம்,


2024 ஆம் ஆண்டு அக்­டோபர் 23 ஆம் திகதி அல்­லது அதனை அண்­மித்த  நாளொன்றில், அமெ­ரிக்கா மற்றும் இஸ்ரேல் அர­சாங்­கங்கள் அறு­கம்பை  பகு­தியில் உள்ள சுற்­றுலாத் தலங்­களை குறி­வைத்து தாக்­குதல்  நடத்­தப்­படக் கூடும் என்ற அச்­சு­றுத்தல் குறித்து பய­ணி­களை  பகி­ரங்­க­மாக எச்­ச­ரித்­துள்­ளது. அதன்­படி ஷகே­ரி­யிடம் இருந்து  பெறப்­பட்ட தக­வல்­க­ளையும் அமெ­ரிக்கா இலங்­கை­யுடன்  பகிர்ந்­து­கொண்­ட­தாக கூறப்­ப‌டும் நிலையில் அதற்­க­மை­வா­கவே முதலில்  இலங்­கையின் பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் விசா­ரணைப் பிரிவு 3 பேரைக் கைது  செய்­துள்­ளது. அவர்­களில், ஷகே­ரி­யுடன் நேரடி தொடர்­பினை கொண்ட முக்­கிய  சந்­தேக நபரும் அடங்­கு­கின்றார்.


அமெ­ரிக்கா, இஸ்ரேல் ஆகி­யன தமது குடி­மக்­க­ளுக்கு பயண  எச்­ச­ரிக்கை விடுத்த பின்னர், ஷகே­ரியை எப்.பி.ஐ. அதி­கா­ரிகள்  தொடர்­பு­கொண்­டுள்­ள­தா­கவும், அதன் போது முதலில், இலங்­கையில் உள்ள  இஸ்­ரேலின் கொன்­சி­யூலர் அலு­வ­ல­கத்­தையே உளவு பார்க்க தனக்கு  அறி­வு­றுத்­தப்­பட்­ட­தா­கவும் பின்னர் மீண்டும் அறு­கம்பே பகு­தியில்  இஸ்­ரே­லி­யர்கள் அதிகம் வந்து செல்லும் சுற்­றுலா தளம் ஒன்று தொடர்பில்  உளவு பார்க்க அறி­வு­றுத்­தப்­பட்­ட­தாக தெரி­வித்­துள்­ள­தாக எப்.பி.ஐ.  விசா­ர­ணை­யா­ளர்கள் அறிக்கை இட்­டுள்­ளனர்.


இந்த உளவு பார்க்கும் பணி­யையே, இப்­போதும் இலங்­கையின்  பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் விசா­ரணை பிரி­வினர் கைது செய்­துள்ள சந்­தேக  நப­ரிடம் ஷகேரி கைய­ளித்­துள்­ள­தாக எப்.பி.ஐ.யின் விசா­ர­ணை­யா­ளர்கள்  அறிக்­கை­யிட்­டுள்­ளனர்.


எவ்­வா­றா­யினும் இந்த விடயம் தொடர்பில் இலங்­கையின் பயங்­க­ர­வாத  தடுப்பு மற்றும் விசா­ரணைப் பிரிவின் சிறப்புக் குழு தீவி­ர­மாக  விசா­ரித்து வரு­கின்­றது. ஷகே­ரியும், தற்­போது பயங்­க­ர­வாத தடுப்பு  மற்றும் விசா­ரணை பிரிவின் 90 நாள் தடுப்புக் காவலின் கீழ் இருக்கும்  பிர­தான சந்­தேக நபரும் ஒன்­றாக இலங்­கையின் சிறையில் இருந்­த­தாக  தெரி­வித்­துள்ளார். இந் நிலை­யி­லேயே சிறையில் உள்ள பலரிடம் விசாரணைகளை,  நீதிமன்ற உத்தரவுக்கு அமைய பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவினர்  முன்னெடுத்துள்ளனர்.


இந்த நிலையில், அறுகம்பையில் பாரிய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை  நடாத்த ஈரானின் புரட்சிகர காவலர் படையின் குறித்த பிரதிநிதி தனக்கு  ஆலோசனையளித்ததாகவும், அதன்படி இலங்கை தற்போது கைது செய்துள்ள பிரதான சந்தேக  நபர் ஊடாக ஏ.கே.47 உள்ளிட்ட ஆயுதங்களை பெற திட்டமிடப்பட்டுள்ளதாக ஷகேரி  எப்.பி.ஐ. இற்கு தெரிவித்ததாக கூறப்படுகின்றது.


இந்த நிலையிலேயே எப்.பி.ஐ. அதிகாரிகளின் விசாரணை அறிக்கை ஊடாக  கூறப்படும் விடயங்களை சான்றுகளோடு உறுதிப்படுத்த இலங்கையின் பயங்கரவாத  தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவு விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக  அறிய முடிகின்றது.


அய்னா


bottom of page