top of page
Group 39.png

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் மு.கா. எத்தனை வாக்குகள் பெறும்??

Author Logo.png

Mohamed Kaleel Rasik

4/11/24

உதுமாலெப்பையின் வாக்குகள்... பாகம் -01 


“அட்டாளைச்சேனை பிராந்தியம்”


அட்டாளைச்சேனை பொது நல அமைப்பொன்றினால் இப்பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட கணிப்பின் படி அட்டாளைச்சேனை, பாலமுனை மற்றும் ஒலுவில் பிரதேசங்களில் உள்ள சமூக அமைப்புக்கள், புத்திஜீவிகள், பாமர மக்கள் மற்றும் தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் ஒட்டுமொத்த அட்டாளைச்சேனை பிராந்தியத்தில் SLMC க்கு அளிக்கப்படுகின்ற வாக்குகளில் வேட்பாளர் உதுமாலெப்பை 39% இலிருந்து 44% மான மனாப்பைகளையே பெற கூடிய சாத்தியம் தென்படுகிறது. இன்னும் இருக்கின்ற வாரங்களுக்குள் இதைவிடவும் குறைவதற்கான சாத்தியமே உள்ளது தவிர அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் மிக மிகக் குறைவே!


இதற்கான  விளக்கத்தை மிகத்தெளிவாக கீழே குறிப்பிடுகின்றேன். இது சற்று சுவாரசியமாகத்தான் இருக்கப்போகிறது.


அதாவது….. அட்டாளைச்சேனை பிரதேசத்தில் மு.கா. எத்தனை வாக்குகள் பெறும்?? அதில் உதுமாலெப்பை அவர்கள் எத்தனை மனாப்பைகளை பெறுவார்?? என்பதினை சற்று உற்று நோக்குவோம்.


அட்டாளைச்சேனை பிரதேசத்தை எடுத்துக்கொண்டால் நடப்பு ஆண்டான 2024 ஆம் ஆண்டுக்கான மொத்த பதியப்பட்ட வாக்குகள் - 35,791. இதில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் எடுத்துக்கொண்டால் (அண்ணளவாக) - 25,626 வாக்குகள்.

அட்டாளைச்சேனை பிரதேசமானது நாம் யாவரும் அறிந்த வகையில் அட்டாளைச்சேனை, ஒலுவில், பாலமுனை மற்றும் தீகவாபி என்ற ஊர்களை பிரதிநிதித்துவப்படுத்தி காணப்படுகிறது.


1- முதலாவதாக தீகவாபியை எடுத்துக்கொண்டால்; அங்கு 100% பூர்வாங்க பௌத்த மக்களைக்கொண்ட பிரதேசமாக கானப்படுகின்றது. எனவே அங்கு எந்தவொரு முஸ்லிம் கட்சிகளுக்குமான வாக்கு  கிடைப்பதற்கான நிகழ்தகவு பூச்சியமே. 0% 

ஆகவே……

SLMC யின் வாக்கு - 0

உதுமாலெப்பையின் வாக்கு - 0


2. இரண்டாவதாக ஒலுவில் பிரதேசத்தை எடுத்துக்கொண்டால்; அங்கு இருக்கின்ற மொத்த வாக்குகள் - 7,153. அதில் அளிக்கப்படுகின்ற வாக்குகள் (அண்ணளவாக) - 5,125. கடந்த காலங்களில் பிரதானமாக 03 கட்சிகள் செல்வாக்கு செலுத்துகின்ற அடிப்படையில் பார்த்தால்.

SLMC   - 52%

NC        - 35%

ACMC  - 12%

Others - 01%

ஆனால் கடந்த பொதுத் தேர்தலை வைத்து தற்போது கணிப்பிட முடியாது! ஏனெனில் நேரடியாக இத்தேர்தலில் ஒலுவில் பிரதேசத்தில் இருந்து ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அவர்களின் கட்சியான NPP சார்பில் ஒரு வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ள காரணத்தினால் அங்கு அளிக்கப்படுகின்ற வாக்குகளிலிருந்து அந்த வேட்பாளருக்கு 25% வாக்குகளை நேரடியாக பெறக்கூடிய ஏதுவான சூழ்நிலை அங்கு காணப்படுகின்றது. அதனடிப்படையில் பார்த்தால் அந்த வாக்குகள் யாவும் SLMC, NC, ACMC அவர்களுடைய வாக்கு வங்கியிலிருந்தே பிரிந்து செல்லும். ஆகவே இம்முறை ஒலுவில் பிரதேசத்தில் அளிக்கப்படுகின்ற வாக்குகளிலிருந்து……


SLMC      - 40%

NPP         - 25%

Cylinder  - 25%

ACMC     - 10% 


இந்த அடிப்படையிலே வாக்குகளை பெறக்கூடிய சாத்தியமே கானப்படுகின்றது. 


அப்படியானால் SLMC ற்கு அளிக்கப்படுகின்ற வாக்குகளில் 40% மான வாக்கு என்பது கிட்டத்தட்ட 2050 வாக்குகள் மட்டுமே. இதில் உதுமாலெப்பை எத்தனை வாக்குகளை பெறுவார் என்பதற்குறிய சாத்தியமான சூழ்நிலைகளை பார்ப்போம்…….


இம்முறை SLMC ஆனது ஒரே ஒரு ஆசனைத்தைத்தான் பெறும் என்பது எல்லோருடைய வாதம். இதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை!


ஆனால் கலநிலவரத்தின் படி மனாப்பை பெற்று கொள்வதற்காக கட்சிக்குள்ளே சக வேட்பாளர்களிடையே பாரிய சதி முயற்சிகள், வெட்டுக்குத்துக்கள் இடம் பெறுகின்றன. இதனடிப்படையில் ஒரு ஆசனத்தை பெற கட்சிக்குள்ளே ஏழு வேட்பாளர்களுக்கிடையில் மனாப்பை பெறுவதற்கான தீவிர போட்டி நிகழ்ந்து கொண்டிருக்கின்றது அப்படியென்றால் ஒலுவில் பிரதேசத்தில் நேரடியாக முன்னால் பா.உறுப்பினர் பைசால் காசிம் அவர்களுக்கு அதிகளவான வாக்குகள் பெறுவதற்குறிய சாத்தியங்களே அதிகம்!!! ஏனென்றால் இத்தேர்தலானது அவருக்கு வாழ்வா, சாவா என்ற தேர்தல். அந்தடிப்படையில் அவர் அதிகளவான தரகர்களை அங்கு அமர்த்தியுள்ளார். அதே போன்று சிறாஸ் மீரா சாஹிப் அவர்களும் அதிகளவான தரகர்களை அமர்த்தி வாக்கு வேட்டையில் ஈடுபடுகின்றார் என்பது யாவரும் அறிந்த விடையமே. ஆனால் அங்கு இருக்கின்ற SLMC வாக்காளர்களின் மன நிலோப்பாட்டை ஆராய்ந்த போது அவர்களில் 90% மானவர்களின் நிலைப்பாடுகள் அவர்கள் முன்னிலைப்படுத்துவது பைசால் காசிம், மன்சூர், சிராஸ், தவம், வாசித், றஹ்மத் மன்சூர் போன்றவர்களையே. ஆனால் உதுமாலெப்பை அவர்கள் இப்பிரதேச வேட்பாளராக இருந்தாலும் இவரை முதன்மை படுத்தி இவருக்கு ஒரு வாக்கினை இட்டு மற்ற வாக்கினை இரு வேட்பாளருக்கு அளிக்கின்ற மனோநிலை ஒரு 1/4 பங்கிற்கும் குறைவான மக்களிடையேயே காணப்படுகின்றது. அதனடிப்படையில் பார்த்தால் மு.காங்கிரஸிக்கு அளிக்கப்படுகின்ற வாக்குகளில் இருந்து சுமார் 20% இலிருந்து 25% ஆன வாக்கினை பெறக்கூடிய சாத்தியமே உதுமாலெப்பைக்கு கானப்படுகின்றது.

 

ஆகவே  ஒலுவில் பிரதேசத்தில்…..

SLMC யின் வாக்கு - 2050

இதில் உதுமாலெப்பை (20%-25%) வாக்குகளை பெறுவார் ஆயின், 

உதுமாலெப்பையின் வாக்கு சுமார் 410 இல் இருந்து 512 க்கு இடைப்பட்ட வாக்கினையே பெறுவதற்கான சாத்தியமே துள்ளியமாக காணப்படுகிறது.


3. மூன்றாவதாக பாலமுனை பிரதேசத்தை எடுத்துக் கொண்டால்...


பாலமுனையில் பதிவுசெய்யப்பட்டுள்ள

மொத்த வாக்குகள் - 7,362

அளிக்கப்படுகின்ற வாக்குகள் (அண்ணளவாக) - 5,300.


நான் முன்பு சொன்னது போன்று கடந்த காலங்களில் 03 பிரதானமாக கட்சிகள் செல்வாக்கு செலுத்துகின்ற வாக்குகளின் அடிப்படையில் பார்த்தால்;


SLMC   - 39%

ACMC  - 35%

NC        - 25%

Others  - 01%


ஆனால் இங்கும் கடந்த பொதுத் தேர்தலை வைத்து கணிப்பிட முடியாது! ஏனெனில், இங்கு நேரடியாக ஒரு பலம் பொருந்திய வேட்பாளர் ஒருவரை ACMC கட்சி சார்பாக களமிறக்கியுள்ள காரணத்தினால் அளிக்கப்படுகின்ற வாக்குகளிலிருந்து 55% வாக்குகளை நேரடியாக பெறக்கூடிய ஏதுவான சூழ்நிலை அங்கு ACMC கட்சிக்கு காணப்படுகின்றது. அந்த வாக்குகள் யாவும் SLMC மற்றும் NC அவர்களுடைய வாக்கு வங்கியிலிருந்தே பிரிந்து செல்லும். ஆகவே இம்முறை பாலமுனை பிரதேசத்தில் அளிக்கப்படுகின்ற வாக்குகளிலிருந்து……


ACMC     - 55%

SLMC     - 30%

Cylinder - 12%

NPP        - 03% 


இந்த அடிப்படையிலே வாக்குகளை பெறக்கூடிய சாத்தியமே கானப்படுகின்றது. 


அப்படியானால் SLMC ற்கு அளிக்கப்படுகின்ற வாக்குகளில் 30% மான வாக்கு என்பது கிட்டத்தட்ட 1,590 வாக்குகள் மட்டுமே. இதில் உதுமாலெப்பை எத்தனை வாக்குகளை பெறுவார் என்பதற்குறிய சாத்தியமான சூழ்நிலைகளை பார்ப்போம்…….


நான் முன்பு சொன்னது போன்றுதான் இங்கு இருக்கின்ற மு.கா போராளிகளின் மன நிலோப்பாட்டை ஆராய்ந்த போது ஒலுவில் கிராமத்தில் என்ன நிலைப்பாடோ அதே நிலைப்பாடுதான் இங்கும். 


அதனடிப்படையில் பார்த்தால் மு.காங்கிரஸிக்கு அளிக்கப்படுகின்ற வாக்குகளில் இருந்து சுமார் 20% இலிருந்து 25% ஆன வாக்கினை பெறக்கூடிய சாத்தியமே உதுமாலெப்பைக்கு காணப்படுகின்றது.


ஆகவே; பாலமுனை பிரதேசத்தில்…..

SLMC யின் வாக்கு - 1,590

இதில், உதுமாலெப்பை (20%-25%) வாக்குகளை பெறுவார் ஆயின், 

உதுமாலெப்பையின் வாக்குகள் சுமார் 318 இருந்து 396 க்கு இடைப்பட்ட வாக்கினையே பெறுவதற்கான சாத்தியமே துள்ளியமாக காணப்படுகிறது.


4.நான்காவதாக அட்டாளைச்சேனை பிரதேசத்தை எடுத்துக்கொண்டால்.....


அட்டாளைச்சேனையில் பதிவுசெய்யப்பட்டுள்ள

மொத்த வாக்குகள் - 19,453

அளிக்கப்படுகின்ற வாக்குகள் (அண்ணளவாக) - 14,000


இங்கும் நான் முன்பு சொன்னது போன்று கடந்த காலங்களில் 03 பிரதானமான கட்சிகள் செல்வாக்கு செலுத்துகின்றன வாக்குகளின் அடிப்படையில் பார்த்தால்…..


SLMC   - 59%

ACMC  - 25%

NC       - 15%

Others - 01%


ஆனால் இங்கும் கடந்த பொதுத் தேர்தலை வைத்து கணிப்பிட முடியாது! ஏனெனில், அட்டாளைச்சேனையில் 03 பிரதான கட்சியில் இருந்தும் வேட்பாளர்களை களமிறக்கியுள்ள காரணத்தினாலும் மற்றும் தற்போதைய ஜனாதிபதி அவர்களுடைய கட்சிக்கும் ஒரளவு கணிசமான வாக்கு வங்கி காணப்படுவதினாலும் அந்த வாக்குகள் யாவும் மு.காங்கிரஸினுடைய வாக்கு வங்கியில்தான் ஒரு பாதகமான தாக்கத்தை செலுத்துகின்றது.


விடயத்துக்கு வருவோம், 

இத்தேர்தலில் அட்டாளைச்சேனையில் SLMC எத்தனை வாக்குகளை பெற்றுகொள்ளும் அதில் எத்தனை மனாப்பக்களை உதுமாலெப்பை அவர்கள் பெற்றுக்கொளவார் என்பதற்கான உண்மையான சாத்தியக் கூறுகளை அறிவோம்.


மு.காங்கிரஸ் கட்சிக்குள் உதுமாலெப்பையின் வருகையின் பிற்பாடு அட்டாளைச்சேனை மு.காங்கிரஸின் வாக்கு வங்கியில் தற்போது அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதா என்று பார்த்தால் அது தான் இல்லை!!!!! வாக்கு வங்கியில் வீழ்ச்சிதான் ஏற்பட்டுள்ளது; அது இன்னும் குறைவதற்கான சாத்தியப்பாடுகளே காணப்படுகின்றது. 


உதாரணத்திற்கு, இவர் தே.காங்கிரஸ் கட்சியிலிருந்து மு.காங்கிரஸில் இணைகின்ற போது இவரோடு இருந்த அனைத்து அட்டாளைச்சேனை தேசிய காங்கிறஸ் போராளிகளும் இவரோடு வந்து மு.காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டார்களா என்றால் அது தான் இல்லை! ஒரு 10% மானோரே இவரோடு வந்து இந்த கட்சியில் சேர்ந்து கொண்டார்கள்; மற்றவர்கள் யாவரும் அதே முகாமிலும் இன்னும் சிலர் வேறு வேறு முகாம்களிலும் இணைந்து செயற்படுகின்றார்கள். தற்போது இவர் நேரடியாக தேர்தலில் மு.காங்கிரஸ் கட்சி சார்பாக களமிறங்கியுள்ள காரணத்தினால் இவரினால் பாதிக்கப்பட்ட (உதாரணமாக இவர் தேசிய காங்கிரஸ் கட்சியில் மாகாண அமைச்சராக இருந்த காலத்தில் இவரால் பாதிக்கப்பட்ட எத்தனையோ மு.காங்கிரஸ் போராளிகள்,  ஆதாரவாளர்கள் இன்று இந்த கட்சியை விட்டு வேறு முகாம்களில் போய் இணைந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். ஏனென்றால், உதுமாலெப்பை எனும் நபரை இந்த அட்டாளைச்சேனை மக்கள் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை! 


அதற்கு உதாரணமாக உதுமாலெப்பை தேசிய காங்கிரஸில் இருக்கும் போது அதாஉல்லா அவர்கள் பலம் பொருந்திய அமைச்சராக இருந்து கொண்டும் இவர் இரண்டு முறை மாகாண அமைச்சராக இருக்கின்ற போதும் இந்த அட்டாளைச்சேனை மக்கள் இந்த உதுமாலெப்பையை ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனெனில், இவருடைய அரசியல் கலாச்சாரம் அப்படி!


இது ஒரு புறமிருக்க……

இன்றைய சூழ்நிலையில் ACMC யின் வாக்கு வங்கியில் சரிவுநிலை ஏற்பட்டுள்ளதா என்று அவதானித்தால் அது தான் இல்லை. அவர்கள் சென்ற பொதுத்தேர்தலையும் விடவும் இந்த பொதுத்தேர்தலில் அவர்களின் வாக்கு வங்கியில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதே தவிர, எவ்வித சரிவு நிலையும் இல்லை. ஏனெனில், அண்மையில் ACMC கட்சி சார்பாக அட்டாளைச்சேனையில் இருந்து புதிதாக அந்த கட்சியில் இணைந்து கொண்டோர் அதிகம். உதாரணமாக  உதுமாலெப்பையின் மக்கள் தொடர்பாடல் அதிகாரி (PRO) ஆக செயற்பட்ட அவரின் சொந்த சகோதரரும், அவர்களுடைய நெருங்கிய குடும்ப உறுப்பினர்களும் கூட ACMC கட்சியில்தான் இணைந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். 


அடுத்ததாக தேசிய காங்கிரஸ் கட்சியை எடுத்துககொண்டால் அதனுடைய தலைவர் மு.அமைச்சர் அதாஉல்லா அவர்களும் அதனுடன் இணைந்து அட்டாளைச்சேனை Lloyds ஆதம்லெப்பை அவர்களும் Cylinder சின்னத்தில் களமிறங்கி செயற்படுவதால், கடந்த பொது தேர்தலை விடவும் இந்த தேர்தலில் அதிகளவான வாக்குகளை பெறக்கூடிய சாத்தியமே காணப்படுகின்றது. அவர்களுடைய வாக்கு வங்கியும் அதிகரித்துள்ளதே தவிர குறைவடையவில்லை.  


அடுத்ததாக NPP ஐ எடுத்துக் கொண்டால் ஒரு கணிசமான அளவு வாக்கு வங்கி இங்கு காணப்படுகின்றது. இந்த வாக்குகள் யாவும் மு.காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கியில்தான் பாதிப்பை செலுத்துகின்றதே தவிர ஏனைய கட்சிகளின் வாக்கு வங்கியில் பாதிப்பை செலுத்தாது. அவ்வாறாயின், SLMC கட்சியானது அட்டாளைச்சேனையில் அளிக்கப்படுகின்ற வாக்குகளில் இருந்து 40% இலிருந்து 45% மான வாக்குகளை பெறக்கூடிய சாத்திய நிலை காணப்படுகிறது. இதனடிப்படையில், 45% என எடுத்துக்கொள்வோம்……


SLMC     - 45%

ACMC    - 35%

Cylinder - 15%

NPP        - 05% 


இந்த அடிப்படையிலே வாக்குகளை பெறக்கூடிய சாத்தியமே கானப்படுகின்றது. 


அவ்வாறாயின், SLMC ற்கு அளிக்கப்படுகின்ற வாக்குகளில் 45% மான வாக்குகள் என்பது கிட்டத்தட்ட 6,300 வாக்குகள் மட்டுமே. அப்படியானால் உதுமாலெப்பை எத்தனை வாக்குகளை பெறுவார் என்பதற்குறிய சாத்தியமான சூழ்நிலைகளை பார்ப்போம்…….


மு.பா. உறுப்பினர் நஸீர் அவர்களை எடுத்துக் கொண்டால் SLMC வாக்கு வங்கியில் 30% இலிருந்து 35% மான வாக்குகள் அவருடைய செல்வாக்கு செலுத்தக்கூடிய வாக்குகளாக காணப்படுகின்றது அது அவருடைய நெருங்கிய ஆதரவாளர்கள், நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் என எடுத்துக் கொள்ளலாம். அந்த வாக்குகள் யாவுமே உதுமாலெப்பைக்கு அளிக்காமல் அந்த கட்சியின் வேறு வேட்பாளர்களுக்கு அளிக்க கூடிய சாத்தியமே காணப்படுகின்றது. 


ஏனெனில், மு.பா. உறுப்பினர் நஸீர் அவர்கள் கடந்த பொதுத் தேர்தல் முடிந்த கையோடு அவருடைய ஆதரவாளர்களை அழைத்து பகிரங்கமாக அனைவருக்கும் ஒரு விடயத்தை சொன்னார் நான் துரோகத்தினால் தோற்கடிக்கப்பட்டேன் அதற்கு முழு காரணம் உதுமாலெப்பை என்று பகிரங்கமாக அனைவருக்கும் தெரிவித்தார். ஆகவே, அவருடைய ஆதரவாளர்களின் வாக்கு உதுமாலெப்பைக்கு கிடைக்கப் பெறுமா என்று பார்த்தால் அதற்கான நிகழ்தகவு பூச்சியமே (Zero).


அடுத்ததாக மர்ஹூம் மசூர் சின்னலெப்பை அவர்களை எடுத்துக் கொண்டால் இந்தக்கட்சியில் இவருடைய வகிபாகம் என்பது அட்டாளைச்சேனையில் உதுமாலெப்பை உச்ச அதிகாரத்தில் இருக்கின்ற போது இந்தக்கட்சிக்கும் மு.காங்கிரஸ் போராளிகளுக்கும் ஒரு கவசம் போல் இருந்து செயற்பட்டவர் அந்த நேரத்தில் எத்தனையோ போராளிகளின் மீது பொய்யான வழக்குகளை தொடர்ந்து அவர்களை மாதக் கணக்கில் சிறையில் அடைத்து இன்னும் சிலரை கடத்தி துன்புறுத்தி வாலால் வெட்டியம் அடித்தும் உதுமாலெப்பை அவர்கள் அவருடைய உச்ச அதிகார வெறிப் பசியை இந்த போராளிகள் மீது கொட்டித் தீர்த்தார். ஆகவே மர்ஹும் மசூர் சின்ன லெப்பை அவர்களின் ஆதரவாளர்கள் அவருடைய நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மு.காங்கிரஸோடு இருந்தாலும் அந்த வாக்குகள் யாவும் உதுமாலெப்பைக்கு கிடைக்குமா என்று பார்த்தால் அதுவும் பூச்சியமே (Zero).


ஆகவே, மு.காங்கிரஸின் வாக்கு வங்கியில் 10% இலிருந்து 15% மான வாக்குகள் மர்ஹும் மசூர் சின்னலெப்பை அவர்களில் செல்வாக்கு செலுத்துகின்றது.


அதே போன்று றசீத் லோயர் அவர்கள் மரத்திலே பொதுத் தேர்தலில் நின்ற போது அட்டாளைச்சேனை பிரதேசமே ஒருமித்து வாக்களித்த போது இவர் மட்டும் எதிராக நின்று அவரை தோற்கடித்தார். அப்படியென்று பார்த்தால் றசீத் லோயர் அவர்களின் நெருங்கிய குடும்ப உறவுகளின் வாக்குகள் உதுமாலெப்பைக்கு அளிக்காமல்தான் வேறு வேட்பாளர்களுக்கு அளிக்க கூடிய சாத்தியமே 100% காணப்படுகின்றது.


அப்படியானால், உதுமாலெப்பை அட்டாளைச்சேனையில் எத்தனை வாக்குகளை பெறுவார் என்று பார்த்தால் முஸ்லிம் காங்கிரஸிற்கு அளிக்கப்படுகின்ற வாக்குகளில் சுமார் 50% இலிருந்து 55% ஆன வாக்கினை பெறக்கூடிய சாத்தியமே உதுமாலெப்பைக்கு கானப்படுகின்றது.


ஆகவே, அட்டாளைச்சேனையில்…..

SLMC யின் வாக்குகள் - 6,300

இதில் உதுமாலெப்பை (50%-55%) வாக்குகளை பெறுவார் ஆயின், 

உதுமாலெப்பையின் வாக்குகள் சுமார் 3,150 இலிருந்து 3,465 க்கு இடைப்பட்ட வாக்கினையே பெறுவதற்கான சாத்தியமே துள்ளியமாக காணப்படுகிறது.


இப்போது கணிப்பின் CLIMAX ற்கு வருவோம்….. 


ஒட்டுமொத்த அட்டாளைச்சேனை பிராந்தியத்தையும் கருத்தில்கொண்டு முஸ்லிம் காங்கிரஸ் பெறுகின்ற மொத்த வாக்குகளில் உதுமாலெப்பை எத்தனை வாக்குகளை பெறுவார் என்பதை இப்போது பார்ப்போம். 


SLMC இன் வாக்குகள் = (அட்டாளைச்சேனை + பாலமுனை + ஒலுவில்)

=(6,300 + 1,590 + 2,050) வாக்குகள்

மொத்தம் = 9,940 வாக்குகள்.


உதுமாலெப்பை பெறப்போகும் வாக்குகள்; 

அட்டாளைச்சேனையில் - 3,150 இலிருந்து 3,465

பாலமுனையில் - 318 இலிருந்து 396

ஒலுவிலில் - 410 இலிருந்து 512


மொத்தமாக = 3,878 இலிருந்து 4,373 இற்கு இடைப்பட்ட வாக்குகளைத்தான் ஒட்டுமொத்த அட்டாளைச்சேனை பிராந்தியத்திலிருந்தே இவரால் பெற முடியும். 


இது இக்கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டது போல் ஒட்டுமொத்த அட்டாளைச்சேனை பிராந்தியத்தில் SLMC கட்சியானது பெறப்போகும் அதிகபட்ச வாக்குகளில் உதுமாலெப்பை பெற இருப்பது வெறும் 39% இலிருந்து 44% மே ஆகும்.


மீண்டும் அடுத்த கட்டுரையில் ஏனைய பிரதேசங்களில் எத்தனை எத்தனை வாக்குகளை பெறுவார் என்பதை பாகம் 2 இல் இதுபோன்றே முழுமையாக ஆராய்வோம். 

bottom of page