
மும்பை: நடிகர் சைஃப் அலிகானின் மும்பை வீட்டில் இன்று அதிகாலையில் நடந்த கொள்ளை முயற்சியில் சைஃப் அலிகான் கத்தியால் குத்தப்பட்டார். அவர் வீட்டிற்குள் புகுந்த திருடன்.. சைஃப் அலிகானை கத்தியால் குத்தி உள்ளார்.
சைஃப் தனது வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்தபோது, திருடன் ஒருவர் சயீஃப் வீட்டிற்குள் புகுந்து உள்ளார். அப்போது சைஃப் வீட்டு வேலைக்கார பெண் அந்த திருடன் உடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். வெளியே போ வெளியே போ என்று கடுமையாக வாக்குவாதம் செய்துள்ளார்.
இந்த சத்தம் கேட்டு சைஃப் எழுந்து கீழே வந்துள்ளார். இதையடுத்து சைஃப் அலிகானும் அந்த திருடன் உடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு உள்ளார். திருடனை தடுக்க சைஃப் அலிகான் முயன்று உள்ளார். இந்த வாக்கு வாதம் அதன்பின் கைகலப்பாக மாறி உள்ளது. இந்த மோதலில் அந்த திருடன் சைஃப் அலிகானை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். மறைத்து வைத்திருந்த கத்தியை சுழற்றி சரமாரியாக அந்த திருடன் தாக்கி உள்ளார். 6 முறை தாக்கிவிட்டு சைஃப் அலிகான் வீட்டில் இருந்து தப்பி ஓடிவிட்டார்.
என்ன நடந்தது? இந்த சம்பவம் நடந்த போது சைஃப் அலிகான் வீட்டில் அவரின் மனைவி கரீனா கபூர் தூங்கிக்கொண்டு இருந்ததாக செய்திகள் வந்தன. ஆனால் அதில் உண்மை இல்லை. கரீனா கபூர் அப்போது வீட்டிலேயே இல்லை.
இதனால் வேறு விதமான அசம்பாவிதங்கள் எதுவும் நடக்கவில்லை. இந்த சம்பவத்திற்கு சில மணி நேரங்களுக்கு முன்புதான் இன்ஸ்டாகிராமில் கரீனா கபூர் தனது பார்ட்டி பற்றி போஸ்ட் செய்து இருந்தார். கரிஷ்மா கபூர், சோனம் கபூர் மற்றும் ரியா கபூர் ஆகியோருடன் சேர்ந்த எடுத்த புகைப்படத்தைப் கரீனா கபூர் பகிர்ந்து இருந்தார்.
கொள்ளையடிக்கப்பட்ட நேரத்தில் கரீனா வீட்டில் இருந்தாரா இல்லையா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று முதலில் செய்திகள் வந்தன. ஆனால் கரீனா கபூர் வீட்டிலேயே இல்லை என்பது உறுதியாகி உள்ளது. சைஃப் அலி கான் வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற நபர், திடீரென அவரை தாக்கியுள்ளார். சைஃப் அலி கான் இப்போது மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சூழலில், அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், கரீனா கபூர் இது தொடர்பாக முக்கியமான அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். ரசிகர்கள் மற்றும் ஊடகங்கள் பொறுமையாக இருக்குமாறும், யூகங்களைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறி உள்ளார்.. இந்த சம்பவம் தொடர்பாக வதந்திகளை தவிர்க்குமாறும் கரீனா கபூர் தனது போஸ்டில் குறிப்பிட்டு உள்ளார். இதுவரை வெளியான தகவலின் படி சைஃப் அலி கானுக்கு நேர்ந்த காயத்தில் 2 காயங்கள் தீவிரமானது ஆழமானது என்றும் தகவல் வெளியாகி உள்ளது.